IKK Others
MKS Others
www.garudabazaar.com

90ஸ் கிட்ஸால் மறக்க முடியாத சிவி படத்தின் 2-ஆம் பாகம் வருது!! என்ன கதை தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90ஸ் கிட்ஸின் விருப்பப் பட்டியலில் முக்கியமான திரைப்படம் சிவி.

90S kids favourite sivi movie next part sivi 2 horror சிவி 2

K.சுந்தர் தயாரிப்பில், கடந்த 2007-ஆம் ஆண்டு வெளிவந்த சிவி படத்தை கே.ஆர்.செந்தில் நாதன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் யோகி, ஜெயஸ்ரீ ராவோ நடித்திருந்தனர். அஞ்சலி ஐயர் இந்த படத்தில் பேயாக நடித்திருப்பார். ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் இந்த வித்யாசமான கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது.

துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் அதிக பொருட் செலவில் சிவி (பாகம்-2) என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளார்கள். இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக படமாக்கியுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த 2-ஆம் பாகத்தின் கதைப்படி, விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள். காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் சில விசாரணைக்கு பிறகு மாணவ மாணவிகள் சென்ற மருத்துவமனைக்கு தேடிச் செல்கிறார்கள். அங்கு சில வீடியோ ஆதாரம் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர். அதை ஆய்வு செய்த போலீசார், அதில் பல ரத்தம் உறைய வைக்கும் சில சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.  இதன் பின்னணியில் விறுவிறுப்பு குறையாமல் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தில் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் யோகி, சரண் ராஜ் அவர்களின் மகன் தேஜா சரண்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்திரி, குமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவி படத்தின் 2-ஆம் பாகத்தை கே.ஆர்.செந்தில் நாதன் இயக்கியுள்ளார். B.L. சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய S.P.அஹமத் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார்.  F.S.பைஜில் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா கஸ்தூரி கண்ணன் தயாரிக்க, விஜய் - பானு இணைந்து தயாரிக்கின்றனர். 

90S kids favourite sivi movie next part sivi 2 horror சிவி 2

People looking for online information on Horror movie, Sivi, Sivi 2 will find this news story useful.