90'S, 2000'S சீரியல் நடிகர்களின் வைரல் Get together ஃபோட்டோ.. மலரும் நினைவுகளை பகிரும் 90'S Kids.!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் 40-களுக்கு பின்னர் சினிமா வரத் தொடங்கியது என்றால், 1960க்கு பிறகு தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் நடக்கத் தொடங்கின.
மெல்ல கருப்பு வெள்ளை காலத்தில் நடிகர்கள் தாங்களே பாட்டு பாடி நடனமாடி இசையமைத்து நடித்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு ஒவ்வொரு துறைக்கும் திறமையுள்ள பலரும் வந்தடைந்தனர். தமிழ் சினிமாவின் புத்துணர்ச்சி என்பது 1960 -ஆம் ஆண்டு தொடங்கியது என்றால், புதிய அலைகள் 1970 மற்றும் 80-களில் தமிழ் சினிமாவில் உருவாக தொடங்கியது. அதன் பொருட்டு கருப்பு வெள்ளை காலங்களில் பீம்சிங், எல்.வி.பிரசாத், கே.ஜி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் திரைப்படங்கள் உருவாகின.
இதைத் தொடர்ந்து 80 மற்றும் 90-களில் பாலச்சந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா ஆகியோரின் திரைப்படங்கள் வரத் தொடங்கின. இதே காலகட்டத்தில்தான் தமிழ் சினிமாவில் அதுவரை மேடை நாடகங்களாக இருந்த போக்கு சீரியலிலும் புத்துயிர் பெற தொடங்கியது. தற்போது இருப்பது போல் தொடக்க காலத்தில் டெலி சீரியஸாக, ஒரு வார எபிசோடு கொண்ட சீரிஸ்கள் அல்லது ஒரு மணி நேர டெலி சீரிஸ் உள்ளிட்டவை ஒளிபரப்பாகின. அதன் பிறகுதான் பல நாட்கள், மாதங்கள், வருடக் கணக்காக ஓடும் சீரியல்களின் வரத்து தொடங்கியது.
மற்ற தலைமுறையை காட்டிலும் 90-களில் பிறந்த பலருக்கும் சீரியல்கள் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான நாஸ்டாலஜியாவாக இருப்பதை காண முடிந்தது. அப்படி 90-களில் ஒளிபரப்பாக ஓடத்தொடங்கி, ஹிட் அடித்த பல முன்னணி சீரியல்களில் தோன்றி நடித்த முன்னணி நடிகர்கள், இன்றும் புதிய லுக்கில் சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். என்னதான் அவர்களுக்கு வயதானாலும் அவ்வப்போது புதிய சீரியல்களில் அவர்களை மீண்டும் பார்க்கும் பொழுது 90ஸ் கிட்ஸ்க்கு உற்சாகம் பிறப்பதை தவிர்க்க முடியாது.
இந்த நிலையில்தான் 90களில் தோன்றி பிரபலம் அடைந்த சீரியல் நடிகர்கள் பலரும் ஒன்றாய் கூடி, ஒரே இடத்தில் சங்கமித்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வரலாகி வருகிறது. இதில் பரீச்சயமான முகங்களை பலரும் நினைவு படுத்தி தங்களுடைய நினைவுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.