உலகையே அச்சறுத்தி அவரும் கொடிய நோய் கொரோனா. இந்நோய் உலகம் முழுக்க பரவி வருகிறது. மிகப் பெரிய விஞ்ஞனிகளும், வளர்ந்த நாடுகளும் மக்களை காப்பாற்ற முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மக்கள் கூடும் பல இடங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில் நேற்று 22.03.2020 மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராத வண்ணம் 144 தடை போடப்பட்டது. அதனை மக்கள் முழு ஒத்துழைப்புடன் நிறைவேற்றினர்.
இந்நிலையில் மீண்டும் நாளை (24.03.2020) செவ்வாய்கிழமை முதல், அரசு அறிவிக்கும் வரை 144 தடைப் போடப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாளை மாலை 5 மணி முதல் அமலுக்கு வருகிறது. மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு அறிவுறுத்தப் படுகின்றனர். ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் திறந்திருக்கும் என்றும், மற்ற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.