''இது க்யூட் ஏஞ்சலுக்காக...'' - குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆல்யா - சஞ்சீவ் ஜோடி..!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு க்யூட் போட்டோவை பதிவிட்டுள்ளார்.
தமிழ்சினிமாவில் குளிர் 100 டிகிரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சஞ்சீவ். இவர் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்து தமிழகமெங்கும் பிரபலமானார். மேலும் அதே சீரியலில் நடித்த ஆல்யா மானஸாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவருக்கும் அண்மையில் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். தங்களது புதிய மகளுக்கான ஒரு அழகிய தொட்டிலின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் ''இந்த கையால் செய்த தொட்டில் எனது க்யூட் ஏஞ்சலுக்காக'' என அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரின் இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
Tags : Sanjeev, Alya Manasa