சும்மா வருமா ஸ்டைலு, எவ்ளோ ப்ராக்டிஸ்... தலைவா டயர்டே ஆகமாட்டிறியே - சூப்பர் Making வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2013-ஆம் ஆண்டுதான்  ட்விட்டரில் கணக்கு தொடங்கினார். ஆனால் அவர் தொடங்கிய முதல் நாளிலேயே இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரைப் பின்தொடர்ந்தனர். தற்போது 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரை ட்விட்டரில் தொடர்கின்றனர். அந்தளவுக்கு அவரை ரசிப்பவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.

Throwback of Rajini's dance training for a song in Sivaji

ரஜினி ரசிகராக இருக்கக் கூடிய ஒவ்வொருக்கும் அவரது எல்லா படங்களும் மிகவும் பிடிக்கும் என்றாலும், ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி ஒரு படி அதிகமாக சூப்பர் ஸ்பெஷல். காரணம் ரஜினி என்ற மாஸ் நடிகருக்கு தீனி போடக் கூடிய அத்தனை விஷயங்களையும் உள்ளடக்கி ஒரு ரசிகன் என்ற வகையில் இயக்குனர் ஷங்கர் இப்படத்தில் களம் இறங்கியிருப்பார்.

2007-ஆம் ஆண்டு வெளியான சிவாஜி தி பாஸ் ஒரு எவர்க்ரீன் சூப்பர் ஹிட் படம் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. இப்படத்தில் ரஜினி, ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.வி,எம் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரஹமான்.

ரஜினியும் ஷங்கரும் முதன்முதலாக இணையப் போகிறார்கள் என்றவுடனேயே படத்துக்கான எதிர்ப்பார்ப்பு அனைவரிடையே எகிறியிருந்தது. அதுவும் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரையும் கூட ஒவ்வொரு சீனையும் டீகோட் செய்து, ரசித்து ரசித்து,வருகிறார்கள் சூப்பர் ஸ்டாரின் வெறித்தன ஃபேன்ஸ். கருப்புப் பணத்துக்கு எதிரான இந்தப் படத்தில் ரஜினி ரசிகர்களுக்காகவே பல சர்ப்ரைஸ்கள் அள்ளித் தெளித்திருப்பார் ஷங்கர். ஒவ்வொன்றும் ஒரு வகை என்றாலும் அதிரடி பாடல் அதில் டாப் ஒன் என்று சொல்லலாம்.

சமீபத்தில் இப்படத்தின் அதிரடி சாங் மேக்கிங்கின் த்ரோபேக் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானது. அதில் அந்தப் பாடல் காட்சிக்கு மாஸ்டரிடமிருந்து ரஜினி டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் கற்றுக் கொண்டு, அதை அப்படியே உள்வாங்கி, திரும்ப செம எனர்ஜியுடனும், செம்ம ஸ்டைலாகவும் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த டான்ஸ் ட்ரெயினிங்கை பார்க்கும் போது ரஜினி கற்பூரத் தீயாக ஒவ்வொரு ஸ்டெப்பையும் கற்றுக் கொண்டு, காட்டுத் தீயாக பாடல் காட்சியில் தன்னை வெளிப்படுத்தியிருப்பார். அந்த ஸ்டைல், அந்த லுக், அந்த டான்ஸ் - தி ஒன் அண்ட் ஒன்லி ரஜினி,  டயர்டே ஆகமாட்டிறியே தலைவா என்று சொல்ல வைத்துவிடுகிறார்.

உதாரணமாக பாடலின் ஓபனிங் சீனில், ஸ்ரேயாவை ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் கடத்த, ஒரு பைக் கூட்டத்தைப் பிளந்து வரும், அதில் கெளபாய் ஸ்டைலில் உடை, ஷூ அணிந்து, ஒய்யாரமாக பைக்கின் ஹாண்டில் பாரில்  க்ராஸ் லெக் போட்டபடி ஒரு கிடார் பாக்ஸுடன் ரஜினி அந்த பைக்கிலிருந்து  குதிக்க, அதே நொடியில் தரையில் பன்ச் ஆகி வயலின் பாக்ஸ் படாரெனத் திறந்து அதிலிருந்து வெளிவந்த  வயலினை கைப்பற்றி டான்ஸ் ஆடத் தொடங்குவார்.

எவ்வளவு அழகான ஃபேண்டஸி காட்சியை இம்மி பிசகாமல் ஃபெர்மார்ம் செய்து தூள் கிளப்பி இருப்பார் ரஜினி. க்ளாஸிக் சீன் வரிசையில் இந்தப் பாடல் காட்சிக்கு எப்போதும் தனி இடம் உண்டு.  எத்தனை தடவை பார்த்தாலும் ஒவ்வொரு தடவையும் புதிதாகத் தோன்றக் கூடிய பாடல் இது. இந்தியன் கெளபாய் வெர்ஷனாக்கி, பாடலுக்குள் ஒரு குறுங்கதையைப் புகுத்தி அசத்தியிருப்பது இதன் கூடுதல் சிறப்பு

5 நிமிடம் 47 நொடிகள் ஓடக் கூடிய இந்தப் பாடல் காட்சி திகட்டாதது. வாலியின் பொன்னான வரிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சயோனரா பாடியிருப்பார்கள். இந்தப் பாடல் காட்சி பின்னி மில்ஸ்லின் பிரம்மாண்டமான செட் போட்டு எடுக்கப்பட்டது. வெனிஸ் நகரத்தின் அழகுக் காட்சிகளை பாடலுக்குப் பின்னணியாக வைத்திருப்பது ஆஹாவெனக் கூடிய சிறப்பு. பாடலின் ஆரம்பக் காட்சியில் தொடங்கும் துப்பாக்கித் துரத்தல் கடைசி வரை தொடர, இறுதியில் ரஜினி ஒரே ஷாட்டில் மொத்த சதிக் கும்பலையும் காலி செய்துவிடுவது தலைவர் வெர்ஷன்.

இந்தப் பாடலுக்காக ரஜினி எடுத்துக் கொண்ட tiredless effort தான் இந்த வீடியோவில் காணக் கிடைக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு அப்படியே அதிரடிதான் பாடல் படத்தில் எப்படி வந்துள்ளது என்பதையும் பார்த்துவிடுங்கள். அப்போதுதான் ஒரு முழுமை கிடைக்கும். என்ன ரெடியா?

சும்மா வருமா ஸ்டைலு, எவ்ளோ ப்ராக்டிஸ்... தலைவா டயர்டே ஆகமாட்டிறியே - சூப்பர் MAKING வீடியோ இதோ வீடியோ

Entertainment sub editor