VIDEO - காமெடி... ஆக்ஷன்... அரசியல்... வெளியானது விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' டீசர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இத்திரைப்படத்தில் மஞ்சிமா மோகன், அதிதிராவ் ஹைதாரி, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் இத்திரைப்படத்தை Seven Screen Studio நிறுவனம் தயாரிக்கிறது.

காமெடி, ஆக்ஷன், அரசியல் வெளியானது விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' டீசர்

விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்திலிருந்து அதீதி ராவ் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தகவல் என்னவென்றால் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா விஜய்சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்தில் இணைந்துள்ளார். அவரை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் அதிரடியான டீசர் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் "நானும் ரவுடிதான்" படத்தில் பட்டையை கிளப்பிய விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் காம்போவின் அதிரடி வசனங்கள் மூலம் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காமெடி ஆக்ஷன் கலந்த ஒரு முழு நீள டிரீட்டாக இந்த படம் அமையும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

VIDEO - காமெடி... ஆக்ஷன்... அரசியல்... வெளியானது விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' டீசர்..! வீடியோ

காமெடி, ஆக்ஷன், அரசியல் வெளியானது விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' டீசர்

People looking for online information on Tughlaq Durbar will find this news story useful.