பிக்பாஸ் வீட்டைவிட்டு 'வெளியேறிய' ஷிவானி... என்ன காரணம்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இறுதிப்போட்டிக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் செய்யப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார். அந்த வகையில் ஆரி, ரியோ, பாலாஜி, ஷிவானி, சோம், கேப்ரியலா, ரம்யா ஆகிய அனைவரும் இந்த பட்டியலில் இடம் பிடித்தனர்.

Shivani Narayanan evicted from Bigg Boss Tamil 4 this week

இதில் சோம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் அதிக மதிப்பெண்கள் பெற்று பைனலுக்கு தேர்வாகி இருக்கிறார். மறுபுறம் ஆரியும் நேற்று கமலால் காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று பாலாஜி காப்பாற்றப்பட்டு இருப்பதாக கமல் அறிவித்தார். இதைக்கேட்டு பாலாஜி கண்கலங்கி அழுக, மற்றவர்கள் அவரை சமாதானம் செய்தனர். இதையடுத்து ரம்யா, கேப்ரியலா, ரியோ, ஷிவானி ஆகியோர் இந்த பட்டியலில் எஞ்சினர்.

கடைசியில் ஷிவானி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவதை கமல் அறிவித்தார். இதையடுத்து 97 நாட்கள் நீடித்த ஷிவானியின் பிக்பாஸ் பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். மற்ற போட்டியாளர்களை விட வாக்குகள் குறைவாக பெற்றதன் அடிப்படையில் ஷிவானி வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Shivani Narayanan evicted from Bigg Boss Tamil 4 this week

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.