குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வராத புகழ்.... ஷிவாங்கி சொன்ன காரணம்... குஷியில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது. அதிலும் முக்கியமாக புகழுக்கு தனியே நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வராத புகழ்.... ஷிவாங்கி சொன்ன காரணம் Pugazh missed in vijay tvshow

இந்நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் பங்கேற்கவில்லை. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றிருந்தார். அவர் ஷிவாங்கியை போலவே பேசியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் புகழ் இல்லை என்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் என்ன என்று அனைவரும் யோசித்து வந்த நிலையில், நேற்றைய தின நிகழ்ச்சியில் ஷிவாங்கி அஸ்வினிடம் கூறும் பொழுது "புகழ் அண்ணா சந்தானத்துடன் ஷுட்டிங் சென்று இருப்பதாக" கூறியிருந்தார். மேலும் புகழ் சந்தானத்துடன் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. இந்நிலையில் இதை வைத்து பார்க்கும்போது புகழ் அடுத்ததாக சந்தானத்துடன் நடித்து வருகிறார் என்று தெரிகிறது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது அவருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Pugazh

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வராத புகழ்.... ஷிவாங்கி சொன்ன காரணம் Pugazh missed in vijay tvshow

People looking for online information on Pugazh will find this news story useful.