தளபதி 63: விஜய்யை அடுத்து வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Thalapathy 63 Shooting- Lady Super Star Nayanthara's video goes viral

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடிகை நயன்தாரா இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கலந்துக் கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை நயன்தாரா கலந்துக் கொண்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.

தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.