உன்னால முடியலைன்னா ஷேர் ஆட்டோ புடிச்சு வந்துடு- யோகி பாபுவின் வேற லெவல் கலாய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் திகில் படமாக உருவாகியுள்ள ‘ஐரா’ திரைப்படத்தில் நடிகர் யோகி பாபுவின் காமெடி குறித்து தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

Yogi Babu's humour riot with Nayanthara in Airaa

முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா திரைப்படத்தை குறும்பட இயக்குநர் சர்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் யோகி பாபு-நயன்தாரா இடையிலான காமெடி டிராக் குறித்த ட்வீட் ஒன்றை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. ஓட்டப்பந்தயத்திற்கு தயாராக இருப்பது போல் நயன்தாராவும், யோகி பாபுவும் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'அப்புறம் நான் கொஞ்சம் இல்ல ரொம்ப வேகமா ஓடுவேன், உன்னால முடியலைனா ஷேர் ஆட்டோ புடிச்சி வந்துடு ஓகே? என யோகி பாபு நயன்தாராவிடம் சொல்வது போல் உள்ளது.

ஏற்கனவே கோலமாவு கோகிலா, விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாரா-யோகி பாபு கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், ஐரா திரைப்படத்தில் இவர்களது காமெடி டிராக் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்பட்ம உலகம் முழுவதும் வரும் மார்ச்.28ம் தேதி ரிலீசாகவுள்ளது.