சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடந்ததையொட்டி, படக்குழுவினருக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா சிற்பபு விருந்தளித்துள்ளார்.

நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, சசிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடந்து முடிந்தது. தற்போது இறுதிக்கட்டமாக விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டது. இப்படத்தில் நிஜ கபடி வீராங்கனைகளும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில், நேற்று (15.03.2019) இயக்குநர் பாரதிராஜா தனது இல்லத்தில், கென்னடி கிளப் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினருக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார்.