‘சூப்பர் டீலக்ஸ்’ - "அட்டகாசமான படம், நான் இல்லாம போயிட்டேனே..!"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தை பார்த்த பின், இதில் நடிக்காம போயிட்டேனே என பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

My regret to not be part of it-Director Anurag Kashyap on Vijay Sethupathi's Super Deluxe

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி குரலில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த பிரபல பாலிவுட் இயக்குநர் தனது கருத்தினை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்வீட்டில், சூப்பர் டீலக்ஸ் அட்டகாசமான படம். கொண்டாட நிறைய இருக்கிறது. படம் பார்த்த பிறகு இதில் நான் நடிக்கவில்லையே என வருத்தமாக உள்ளது. குமரராஜா ஒரு இறக்கமற்ற, பயமற்ற திறமையான இயக்குநர். இவரிடம் நிறைய விஷயங்கள் உள்ளது. இது பற்றி நான் சொல்லக் கூடாது, இருந்தாலும் உங்களுக்காக அவர் படத்தில் இன்னும் என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை’ என ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் டிரைலர் ரிலீசானபோது, இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் என்னால் நடிக்க முடியவில்லை என வருந்துகிறேன் என அனுராக் கஷ்யப் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.