தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராகவும், நடிகராகவும் தனக்கென தனி அடையாளங்களை கொண்டிருப்பவர் எஸ்ஜே சூர்யா. கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
    தற்போது இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை 'கள்வனின் காதலி' உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் எஸ்ஜே சூர்யா, அமிதாப்பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
மேலும் தற்போது எஸ்ஜே சூர்யா நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் 'மான்ஸ்டர்' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துவருகிறார்.
   