ரஜினியின் 'எந்திரன்' தான் என் படத்துக்கான இன்ஸ்பிரேஷன் - அவெஞ்சர்ஸ் இயக்குநர் ருசிகரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'எந்திரன்' திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

Avengers End game director joe russo talked about Rajinikanth's Enthiran

இந்த படத்தில் வசீகரன் என்கிற விஞ்ஞானியாகவும், சிட்டி என்கிற ரோபோவாகவும் இரட்டை வேடங்களில் ரஜினிகாந்த் மிரட்டலான நடிப்பை வழங்கியிருப்பார்.

இந்நிலையில் 'அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்' படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை விளம்பரபடுத்தும் நோக்கத்தோடு அதன் இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரஸ்ஸோ  இந்தியா வந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மார்வெல் ஆன்தம் பாடலை  வெளியிட்ட பின்னர் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது இந்திய படங்கள் பற்றி பேசும்போது, 'எந்திரன்' படத்தின் கிளைமேக்ஸ்-ல் இடம் பெற்ற காட்சிகள் தான் ஒருவகையில் என்னுடைய அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்துக்கு ஒரு வகையில் தூண்டுகோலாக அமைந்தது. அந்த படத்தில் எல்லா அல்ட்ரான்களும் ஒரு சேர பிரம்மாண்டமாக உருவாகும் காட்சி படமாக்கப்பட்டிருந்தது' என்றார்.