சிவகார்த்திகேயனின் SK15 படத்திற்கு கிடைத்த மாஸ் டைட்டில் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK15 திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan's SK15 with P.S.Mithran is titled as Hero

‘சீமராஜா’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து, ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் SK15 சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இதனிடையே, ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கும் ‘SK15’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

SK15 திரைப்படத்தின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷனும், ‘நாச்சியார்’ பட நடிகை இவானாவும் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ‘ஹீரோ’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.