நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் SK16 திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘Mr லோக்கல்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இது தவிர ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் SK14 திரைப்படமும், ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் SK15 திரைப்படமும் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ளது.
இவ்விரு திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் விரைவில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் SK16 திரைப்படத்தின் பணிகளை தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
#SK16BySunPictures@Siva_Kartikeyan @pandiraj_dir pic.twitter.com/2xPTk8psHu
— Sun Pictures (@sunpictures) March 8, 2019