'கேமராவுக்கு பின்னால் தல அஜித்...' 'நேர்கொண்ட பார்வை' ஹீரோயினுடன் பிரபல இசையமைப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித், வித்யா பாலன் உள்ளிட்டோர் நடித்துவரும் படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத் இயக்குகிறார்.

Ghibran tweets About thala Ajith and Vidya Balan in Ner konda Paarvai

இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தல அஜித்துடன் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வித்யா பாலனுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், ஆம் இது வித்யா பாலன் இந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர்.

இந்த புகைப்படத்துக்கு என்னால் சரியாக போஸ் கொடுக்க முடியவில்லை. காரணம் நான் கேமராவுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கும் தல அஜித் சாரை பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த புகைப்படத்துக்கு நன்றி அஜித்குமார் சார். என்று குறிப்பிட்டுள்ளார்.