நான் மிகவும் அதிர்ஷ்டசாலி - 'நேர்கொண்ட பார்வை'யில் அஜித்துடன் நடித்த அனுபவம் கூறும் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் தற்போது பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'பிங்க்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார்.

Delhi Ganesh shares his experience with Ajith in Nerkonda Paarvai

நீண்ட வேளைக்கு பிறகு இந்த படத்தின் மூலம் அஜித்துடன் யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ளார்.  மேலும் நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத் இயக்குகிறார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்க, ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது அஜித் குறித்து பேசிய அவர்,  டெல்லி கணேஷ் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனெனில் அஜித் மிகப் பெரிய நடிகர். அவர் கூட இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இந்த முறை அவர் நீதிமன்றத்தில் வாதாடுவது போன்ற காட்சி.  காட்சி முடிந்ததும் என்னை அனைத்துக்கொண்டார்.என்றார்