அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்திலிருந்து வெளியான சுவாரஸியத் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'விஸ்வாசம்' வெற்றிக்கு பிறகு, அஜித் நடித்துவரும் படம் நேர் கொண்ட பார்வை. ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இதனை 'தீரன் அதிகாரம் ஒன்று' இயக்குநர் வினோத் இயக்குகிறார்.

Interesting Announcement from Thala Ajith's Nerkonda paarvai

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது பேவியூ புரொஜக்ட்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இடைவேளையே இல்லாமல் வருகிற ஏப்ரல் மாதத்தின் நடுப் பகுதி வரை முழு வீச்சில் நடைபெறவிருப்பதாக படத்தின் மக்கள் தொடர்பு பிரிவிலிருந்து டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.