சூப்பர் ஸ்டார், தளபதியை புகழ்ந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்தியாவில் ரசிகர்களின் அதிக செல்வாக்கை பெற்ற நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் என பிரபல பாலிவுட் இயக்குநர் ரோகித் ஷெட்டி புகழாரம் சூட்டியுள்ளார்.

Chennai Express director Rohit shetty heaps praise on Superstar Rajinikanth and Thalapathy Vijay

இது குறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ரோகித் ஷெட்டி, திரைப்படம் ரிலீசான 3 நாட்களில் ரசிகர்களின் கூட்டத்தை வைத்த படத்தின் கலெக்‌ஷனை எடுத்துவிடும் அளவிற்கு செல்வாக்கு மிகுந்த நடிகர்கள் ரஜினிகாந்தும், விஜய்யும் என கூறியுள்ளார். இது ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர்கள் தவிர நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் ஆகியோரும் ரசிகர்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள் என ரோகித் ஷெட்டி கூறியுள்ளார். மேலும், திரையரங்குகளின் பற்றாக்குறை மற்றும் பைரசி பிரச்னை திரைப்படத்தின் வசூலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

ரோகித் ஷெட்டி இயக்கத்தில் இறுதியாக வெளியான ரன்வீர் சிங், சாரா அலிகான் நடித்த ‘சிம்பா’ திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் ரூ.250 கோடி வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார், தளபதியை புகழ்ந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ இயக்குநர் வீடியோ