மக்கள் செல்வனுடன் ஃபேன் பாய் மொமெண்ட்..!- பிரபல கிரிக்கெட் வீரர் ஹாப்பி அண்ணாச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகன் என பிரபல கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கர் புகைப்படம் பகிர்ந்துள்ளார்.

Cricketer Vijay Shankar's fanboy moment with Makkal Selvan Vijay Sethupathi

இந்திய அணியின் ஆல்ரவுண்டராக கலக்கி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஷங்கர். சென்னையைச் சேர்ந்த விஜய் ஷங்கர் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாட தேர்வாகியிருக்கும் விஜய் ஷங்கர், நடிகர் விஜய் சேதுபதியை சமீபத்தில் சந்தித்துள்ளார். அவருடன் எடுத்த புகைப்படத்தை விஜய் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணிக்காக விளையாடி வரும் விஜய் ஷங்கர், தான் விஜய் சேதுபதியின் ரசிகர் என்பதையும் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வரும் மார்ச்.29ம் தேதி ரிலீசாகவுள்ளது.