தடுமாறும் ரசிகர்கள்... தாங்கி பிடிக்கும் தளபதி விஜய்... வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சர்கார்' படத்தின் வெற்றிக்கு பிறகு அட்லி இயக்கத்தில் விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தில் தளபதி விஜய் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Vijay Rescue his fans on Thalapathy 63 shooting spot

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு தளத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த வேலியைச் சுற்றிலும் ரசிகர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். அப்போது விஜய்யை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாகினர். அதனால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் காரணமாக அந்த வேலி சரிந்து விழத் தொடங்கியது. அதனைப்பார்த்த விஜய் வேகமாக சென்று அந்த வேலியை தாங்கி பிடிக்கிறார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.