திருமணத்திற்கு தயாரான விஷால்-அனிஷா: வைரலாகும் நிச்சயதார்த்த ஸ்டில்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் இன்று (மார்ச்.16) ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Vishal and Anisha Alla Reddy are engaged today at Hyderabad

‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால், பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளரகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் விஷால் பதவி வகித்து வருகிறார்.

விஷாலின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், கடந்த ஜன.16ம் தேதி தான் திருமணம் செய்துக் கொள்ளவிருக்கும் பெண்ணை பற்றிய அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் வெளியிட்டார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனிஷா அல்லா ரெட்டி என்பவரை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக விஷால் அறிவித்திருந்தார். தொழிலதிபரின் மகளான அனிஷா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘பெல்லிச்சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று (மார்ச்.16) ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் குடும்பத்தினரும், விஷாலின் நெருங்கிய நண்பர்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். குறிப்பிட்ட சில திரையுலக பிரபலங்களும், நடிகர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

விஷால்-அனிஷா ஜோடியின் திருமணம் தேதி குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு தயாரான விஷால்-அனிஷா: வைரலாகும் நிச்சயதார்த்த ஸ்டில்ஸ் வீடியோ