நட்பு டா..: ‘ராட்சசன்’ ஹீரோவின் புதுப்பட அப்டேட் இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘ராட்சசன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் பிரபு சாலமன் இயக்கி வரும் படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார்.

Vishnu Vishal and Vikranth to come together for a film, official announcement soon

நடிகர் விஷ்ணு விஷாலும், அவரது நடிகரும், நண்பருமான விக்ராந்தும் இணைந்து நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், விக்ராந்துடன் இணைந்து நடிக்கவிருப்பதை நடிகர் விஷ்ணு விஷாலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

விக்ராந்த் நடிப்பில் ‘வெண்ணிலா கபடிக்குழு 2’, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’, ‘பக்ரீத்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. அதேபோல், விஷ்ணு விஷால் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.