‘காஞ்சனா 3’ ஹீரோயினின் அடுத்தப்படம் குறித்த அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை வேதிகா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் பூஜையுடன் நேற்று தொடங்கியது.

Kanchana 3 actress Vedhika signed her next with Aadi Saikumar for a billingual

தமிழில் ‘முனி’, ‘காளை’, பாலாவின் ‘பரதேசி’, ‘காவிய தலைவன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வேதிகா.

தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் ‘முனி 4/காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க வேதிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் வேதிகாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் ஆதி சாய்குமார் நடிக்கிறார். அவுரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தை கார்த்திக் விக்னேஷ் இயக்குகிறார். கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு தெலுங்கு படத்தில் வேதிகா நடிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் மார்ச்.25 முதல் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தலக்கோணா என்ற பகுதியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.