'பிளக்ஸ், பேனர் வைத்து ரசிச்ச நான் என்னுடைய சூப்பர் ஸ்டார் படத்தில் பங்கேற்கிறேன்'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'விஸ்வாசம்' படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் தற்போது 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் நடித்துவருகிறார். இந்த படத்தை 'சதுரங்கவேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத் இயக்குகிறார்.

Adhik Ravichandran emotional tweet about Thala Ajith's Nerkonda paarvai

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்க, ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங்  ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

'நேர் கொண்ட பார்வை' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நலையில் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இந்த படத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் , என் வாழ்க்கையில் உருக்கமான தருணம் இது. சிறுவனாக பேனர் மற்றும் ஃபிளெக்ஸ் வைத்தவன் தற்போது என்னுடைய சூப்பர்ஸ்டாரின் படத்தில் நடிக்கிறேன். இந்த 15 நாட்களில் அஜித் அவர்களால் சிறந்த மனிதனாக மாற்றமடைந்துள்ளேன். இந்த வாய்ப்பை அளித்தமைக்காக தல அஜித் சார், சுரேஷ் சார், இயக்குநர் வினோத் சார் ஆகியோருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.