வேற லெவலில் மிரட்டும் காமெடி நடிகர்; அமெரிக்காவில் உருவாகும் அடுத்தப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காமெடி நடிகர் விவேக் நடிப்பில் உருவாகி வரும் ‘வெள்ளைப்பூக்கள்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

Actor Vivek's Next Vellai Pookal first Look released by Suriya

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சிந்திக்க வைக்கும் காமெடிகளில் கலக்கியவர் நடிகர் விவேக். இவர், ‘நான் தான் பாலா’, ‘பாலக்காட்டு மாதவன்’ போன்ற திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

விவேக் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’, தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் விவேக் நடித்து வருகிறார்.

இதனிடையே, இயக்குநர் விவேக் இளங்கோவன் இயக்கத்தில் ‘வெள்ளைப்பூக்கள்’ என்ற திரைப்படத்தில் விவேக் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவின் சியாட்டில் ஆரம்பமாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

இண்டஸ் எண்ட்ர்ப்ரைசஸ், ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் பிரபல ஸ்ட்ரீமிங் தளமான டெண்ட்கொட்டா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் ஏப்.19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது டெண்ட்கொட்டா நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.