ஆர்யா - சாயிஷா திருமணத்தில் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கஜினிகாந்த்' படத்தில் ஆர்யாவும், சாயிஷாவும் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

Suriya and Karthi wishes to Arya and Sayyeshaa's Marriage

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று இவர்கள் திருமண வரவேற்பு மற்றும் சங்கீத் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் முக்கிய பாலிவுட் பிரபலங்கள் சஞ்சய் தத், ஆதித்யா பஞ்சோளி, சப்யஸாச்சி ஸ்தபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் தமிழ், தெலுங்கு மலையாள நடிகர் , நடிகையர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இன்று ( மார்ச் 10 ) ஆர்யா - சாயிஷா இருவருக்கும் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா - கார்த்தி இயக்குநர்கள் சக்தி சௌந்தரராஜன்,விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஆர்யா -  சாயிஷாவுடன் சூர்யா மற்றும் கார்த்தி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.