சூர்யா 38-ல் செம்ம சர்ப்ரைஸ் இருக்கு- சீக்ரெட் சொல்லும் ஜி.வி.பிரகாஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 38’ திரைப்படத்தின் இசையில் சூப்பர் சர்ப்ரைஸ் இருப்பதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளர்.

G.V.Prakash Kumar opens up on Suriya-sudha Kongara's Suriya 38

‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 38’ திரைப்படத்திற்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து Behindwoods-க்கு ஜி.வி.பிரகாஷ் பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அவர் பேசுகையில், ஷூட் போவதற்கு முன்பாகவே இசையை முடித்துக் கொடுப்பேன் என சத்தியம் செய்திருந்தேன். அதேபோல் முடித்துவிட்டோம். இதுவரை என் இசையில் பார்க்காத ஒன்று இந்த படத்தில் இருக்கிறது என்றார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே தாறுமாறான கூட்டணியில் உருவாகியுள்ளது. இந்த படம், எங்களது கூட்டணி இசை பிரியர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாது தனுஷின் அசுரன், ஜெயில் ஆகிய திரைப்படங்களில் வரும் பாடல்களும் அற்புதமாக வந்துள்ளது.

மேலும், தனுஷ் உடனான மனக்கசப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜி.வி, இரண்டு எனர்ஜி இருக்கும்போது கருத்து வேறுபாடு இருக்க தான் செய்யும். அந்த சூப்பர்ஹிட் கூட்டணி தற்போது மீண்டும் அமைந்துள்ளது என்றார். தற்போது ஆயிரத்தில் ஒருவன் ரீ-ரிலீஸ்-ல் எனது இசையை கொண்டாடும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

அந்த படம் ரிலீசானபோது எங்களது கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமளித்தது. ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு செல்வராகவன் கதை வைத்திருப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

சூர்யா 38-ல் செம்ம சர்ப்ரைஸ் இருக்கு- சீக்ரெட் சொல்லும் ஜி.வி.பிரகாஷ் வீடியோ