தல அஜித் மற்றும் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை சுவாதி மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்.

‘தேவா’ திரைப்படத்தில் விஜய்யுடனும், ‘வான்மதி’ திரைப்படத்தில் அஜித்திற்கும் ஜோடியாக நடித்த சுவாதிக்கு, அந்த பட்னக்களின் வெற்றியைத் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், பட வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு படிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து ஹைதராபாத்திற்கு சென்றார்.
பின்னர், அமீர் இயக்கிய ‘யோகி’ திரைப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் சினிமாவில் களமிறங்கினார். தற்போது தெலுங்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், சினிமா மட்டுமல்லாது சீரியல்களில் நடிக்கவும், டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவும் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனபோதிலும், தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்போது திரையில் தோன்றுவீர்கள்? என கேட்கிறார்கள், மேக்கப் இல்லமால் சென்றாலும் அடையாளம் கண்டுக் கொள்கிறார்கள். அப்படி ஒரு சந்திப்பில் ஒரு தம்பதியினர் என்னிடம் கேட்டபோது தான் மீண்டும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். எனது குடும்பத்தினரும் முழு ஆதரவு தெரிவித்தனர் என சுவாதி கூறியுள்ளார்.
அவ்வப்போது சினிமாக்கள் பார்ப்பதுண்டு, தமிழ் சினிமா தொழில்நுட்ப ரீதியாக நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். என் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க நல் வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன் என சுவாதி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, விரைவில் சுவாதி தமிழ் ரசிகர்களை வெள்ளித்திரை அல்லது சின்னத்திரையில் சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.