கொரோனா போகணும்னா பெஸ்ட் ஐடியா 'இது' தான்...! - பிரபல மருத்துவமனை வெளியிட்ட ஆய்வு முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் உள்ள ஒரு மருத்துவமனை நடத்திய ஆய்வில் ஸ்டீம் தெரபி மூலம் கொரோன வைரஸ் குணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பரவி வரும் கொரோனா வைரசிற்க்கு இதுநாள் வரை அதிகாரபூர்வமாக எந்த ஒரு தடுப்பூசியும், தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஒரு சில நாடுகள் கண்டுபிடித்த தடுப்பு மருந்துகள் தற்போது மனித பரிசோதனையில் உள்ளது. இந்நிலையில் மும்பை செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஸ்டீம் தெரபி மூலம், அதாவது ஆவி பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் அழிவது கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் நடத்தபட்ட இந்த ஆய்வில் சுமார் 105 கொரோனா நோயாளிகள் உட்படுத்தப்பட்டுள்ளார். அதில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாதவர்கள் என இரு குழுக்களாக பிரித்துள்ளனர்.
முதல் குழுவினர் இருக்கும் கொரோனா அறிகுறி இல்லாத சுகாதார பணியாளர்களை தினமும் இரு முறை தலா 5 நிமிடங்களுக்கு ஆவி பிடிக்க வைத்துள்ளனர். மேலும் மூக்கு வழியாக நீராவியை உள்ளிழுக்குமாறும், வாய் வழியாக சுவாசிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்து 2-வது குழுவில் இருக்கும் அறிகுறி இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 3 மணி நேரத்துக்கு ஒரு முறை தலா 5 நிமிடங்கள் ஆவிபிடித்து மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளிழுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு டாக்டர் திலீப் பவார் தலைமையிலான குழுவினர் நடத்தி உள்ளனர்.
இதுகுறித்து கூறும் டாக்டர் திலீப், 'எங்கள் மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு முதலில் டோசிலிஜூமாப் ஊசி மருந்தை கொடுத்து வந்தோம். அதில் சுமார் 80 சதவீத நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. அதன்பின் கொரோனா வைரஸ் குறித்து வந்த அனைத்து ஆய்வறிக்கைகளையும், தகவல்களையும் படித்து நாங்கள் ஒரு ஆய்வினை நடத்தலாம் என முடிவுக்கு வந்தோம்.
கொரோனா வைரஸ் மனித உடலுக்கு கண் காது, மூச்சு குழல் வழியேதான் நுழைகிறது. பொதுவாக நமக்கு சளி பிடிக்கும் போதும், சுவாசப்பாதையில் தொற்று ஏற்பட்டு சுவாசிக்க சிரம படும்போதும் ஆவி பிடித்து நீராவியை உள்ளுக்குள் இழுப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.மேலும் நீராவியை பொறுத்தமட்டில் அது 70 முதல் 80 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலையைக் கொண்டுள்ளது. இது கொரோனா வைரசின் உறுதியற்ற வெப்ப நிலையை விட அதிக வெப்பம் ஆகும். அதுமட்டுமில்லாமல் பொதுவாக வைரஸ்கள் 56 முதல் 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கொல்லப்படும் என்பது தெரிந்த ஒன்று.
அதன் காரணமாகத்தான் 105 கொரோனா பாதிப்படைந்தவர்களை 2 குழுக்களாக பிரித்து ஆய்வு செய்தோம். அதில் முதல் குழுவில் இருந்த எந்த நோயாளிகளும் 14 நாட்கள் முதல் 2 மாதங்கள் வரை பின்தொடர்ந்து கண்காணித்ததில் கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை எனவும், இரண்டாவது குழுவினர், அதாவது லேசான அறிகுறிகள் உடையவர்கள் 3 நாளில் இயல்பு நிலைக்கு திரும்பினர். மிதமான அறிகுறிகள் இருந்தவர்கள் 7 முதல் 10 நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். மேலும் நாங்கள் செய்த இந்த ஆய்வு கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாரம்பரிய வழக்கப்படி ஆவி பிடித்தும் தீர்வு காணலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது' எனக்கூறியுள்ளார்.