“கொரோனா தடுப்பூசி முழுசா எப்பதான் சாமி கெடைக்கும்?”.. முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரிட்டன் ஆலோசகர்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி எப்போது கிடைக்கும் என தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரிட்டன் அரசாங்கத்தின் முன்னணி தொற்றுநோய் ஆலோசகர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி 2020 ஆண்டு முடிவதற்குள் மற்றும் 2021 ஆம் ஆண்டுக்குள் முழுமையான தடுப்பூசி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் தடுப்பூசி கண்டுபிடிப்பில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் முன்னணி நிபுணரான sir jeremy farrar தெரிவித்துள்ளார்.
இது பற்றிப் பேசியவர், “தடுப்பூசி உருவாக்கத்தில் நான் ஈடுபட்டதில் இருந்து கடந்த ஏழு மாதங்களில் அடைந்த முன்னேற்றம் முற்றிலும் வியப்பூட்டுவதாய் இருக்கிறது. இப்போது முதல் தயாரிப்பு தடுப்பு தடுப்பூசிகள் உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து என அநேகமாக 5 அல்லது 6 நாடுகளில் முதல் தயாரிப்பு தடுப்பூசிகள் இருக்கலாம். அவை சிகிச்சைக்கு கிடைக்கின்றன” என்று தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் முதல் தயாரிப்பு தடுப்பூசிகள் கொரோனா நோயை முற்றிலுமாக எல்லாவற்றையும் தீர்க்காது என்றும் அவர் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார்.