44 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக இலங்கை அணி செய்த சாதனை..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 29, 2019 03:53 PM

வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

Sri Lankan cricket team register first home series win in 44 months

வங்கதேச அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 238 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக முஷ்பிஹூர் ரஹிம் 98 ரன்களை எடுத்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி 44.4 ஓவர்களில் 242 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 44 மாதங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இது அந்நாட்டு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் இலங்கை அணி வீரர் அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Tags : #ODI #SRI LANKA #BANGLADESH #SLVBAN