‘சிலரின் அரசியல் ஆதாயம்’.. ‘தற்கொலை செய்வதைத் தவிர’.. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கலெக்டரிடம் வேதனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Mar 13, 2019 01:45 PM
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன், தற்கொலை செய்யும் மனநிலையில் உள்ளதாக தனது வேதனையைத் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சபரிநாதன், அவரது நண்பர்களான திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தக்குமார் உள்ளிட்டோர் 200 -க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து இவர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இவர்கள் பெண் ஒருவரை பாலியல் ரீதியலாக துன்புறுத்தும் வீடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் ‘அண்ணா விட்ருங்கணா’ என கதறும் காட்சிகள் தமிழகத்தை உலுக்கியது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்து.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கோவை ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துவிட்டு பேசுகையில்,‘பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் என்பவர் சொல்லித்தான் நடவடிக்கை எடுத்தார்கள். நாங்கள் புகாரளித்த அனைத்து நபர்களையும் போலிஸார் கைது செய்துவிட்டனர். பின் யாரை கைது செய்யச்சொல்லி போராட்டங்கள் பண்ணுகின்றனர் என தெரியவில்லை. சிலர் தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக தவறான தகவல்களைப் பரப்புவதால், நாங்கள் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறோம். இதனால் தற்கொலை செய்வதைவிட வேறுவழியில்லை. தவறான தகவல்களால் இந்த வழக்கை திசை திருப்ப முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர் மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.