'அந்த கேஸுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை'..விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்க தயார்..‘பார்’நாகராஜன் கலெக்டரிடம் மனு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Mar 14, 2019 06:42 PM
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறப்படும் பார் நாகராஜன் என்பவர் கோவை ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 200 -க்கும் அதிகமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சபரிநாதன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தக்குமார் ஆகிய நால்வரை காவல்துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை மிரட்டியதாக பார் நாகராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனை அடுத்து நேற்று இவரின் பார் பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பார் நாகராஜன் பேசியதாவது,‘எனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமில்லை. எனக்கு வேண்டாதவர்கள் இந்த வழக்கில் என்னை சம்பந்தப்படுத்துகின்றனர். அதனால்தான் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தேன். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். காவல்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்புக் கொடுக்க தயாராக உள்ளேன். மேலும் இதுதொடர்பாக யார் மீதும் அவதூறு வழக்கு கொடுக்கப் போவதில்லை’ என விகடன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.