‘அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை’.. பரபரப்பான வீடீயோவை வெளியிட்ட ‘பார்’ நாகராஜன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Mar 14, 2019 01:10 PM
பொள்ளாச்சி பாலியல் விவக்காரம் தொடர்பாக வெளியான வீடியோவில் இருப்பது தான் இல்லை என பார் நாகராஜன் புதிய வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரிநாதன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தக்குமார் ஆகிய நால்வரை போலிஸார் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
அப்போது இது தொடர்பாக புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை மிரட்டியதாக பார் நாகராஜன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து இவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மேலும் பொள்ளாச்சி பாலியில் விவகாரம் எதிரொலியாக நேற்று நாகராஜனின் பார் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் தொடர்பான வீடியோவில் இருப்பது தான் இல்லை எனவும், அது கைதாகி சிறையில் இருக்கும் சதீஷ் எனவும் பார் நாகராஜன் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்திருப்பதாகவும், தன் மீதான குற்றத்தை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
