'IPL-லில் இருந்தும் ஓய்வா???'... 'போட்டிக்குப்பின் தோனி செய்த ஒரு காரியத்தால்'... 'பெரும் குழப்பத்தில் ரசிகர்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய போட்டிக்குப்பின் தோனி செய்த காரியம் ஒன்று அவர் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறப் போகிறாரா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

2020 ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி வெற்றியோடு தொடங்கினாலும் போக போக மிக மோசமாக ஆடி பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதிலும் வரிசையாக டெல்லி, ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர், மும்பை என முக்கிய அணிகளிடம் எல்லாம் சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து முதல்முறையாக சிஎஸ்கே அணி தற்போது பிளே ஆப் வாய்ப்பை இழந்து உள்ள சூழலில் இந்த தொடரில் தோனியின் பார்மும் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையிலேயே இருந்தது.
இந்த தொடரின் எந்த போட்டியிலும் சரியாக ஆடாத தோனி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே 40+ ரன்களை எடுத்தார். சிஎஸ்கே கேப்டனாகவும் தோனி பவுலிங் ரொட்டேஷன் தொடங்கி அணி தேர்வு வரை பல விஷயங்களில் மிக மோசமாக சொதப்பினார். தோனியின் பேட்டிங்கில் பழைய வேகமும், துல்லியமும் இல்லாத நிலையில், தற்போது தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல ராஜஸ்தான் மேட்ச்சிற்கு பின் தோனி ஜோஸ் பட்லருக்கு தனது டி ஷர்டை கொடுத்தார். அதேபோல நேற்றும் போட்டிக்கு பின் பாண்டியா பிரதர்ஸுக்கு தனது டி ஷர்டை தோனி கொடுத்தார். இப்படி எல்லோருக்கும் தனது டி ஷர்டை தோனி வழங்குவது பெரிய அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதால்தான் இப்படி டி ஷர்டுகளை நினைவுப் பரிசாக கொடுக்கிறாரா என ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. தோனி பொதுவாகவே ஓய்வு பெறுகிறார் என்றால் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி திடீரென்றே ஓய்வு முடிவை அறிவிப்பார். அதனால் இந்த முறையும் அப்படி எதுவும் முடிவு எடுப்பாரா எனக் கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் அடுத்த சீசனுக்கு இளம் வீரர்களை சிஎஸ்கே அணியில் தேர்வு செய்ய வேண்டும் என தோனி நேற்று பேட்டியில் கூறியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Mahi bhai 🤗❤️ @msdhoni pic.twitter.com/NpJxbUopUH
— hardik pandya (@hardikpandya7) October 23, 2020

மற்ற செய்திகள்
