'TENSION ஆக்கிய இளம்வீரரால்'... 'கோபத்தில் மும்பை பவுலர் சொன்ன அந்த வார்த்தை!!!'... 'வெளியான வைரல் சம்பவத்தின் பின்னணி!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய போட்டியில் மும்பை வீரர் க்ருணால் பாண்டியா மைதானத்தில் கெட்ட வார்த்தையில் சக வீரரை திட்டிய சம்பவம் வைரலாகியுள்ளது.
மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவரில் 114 ரன்கள் எடுக்க, அதன்பின் களமிறங்கிய மும்பை அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் எளிதாக 12.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே அணியின் முதல் 7 பேட்ஸ்மேன்கள் வரிசையாக 9 ஓவருக்குள் அடுத்தடுத்து அவுட் ஆக, அந்த அணி களத்தில் மோசமாக திணறி வந்த நிலையில், மும்பை வீரர்கள் கூலாக பவுலிங் செய்தனர். ஆனால் இன்னொரு பக்கம் க்ருணால் பாண்டியா மட்டும் மைதானத்தில் கொஞ்சம் கோபமாக காணப்பட்டார்.
தொடக்கத்தில் சிஎஸ்கே அணி பெரிய சரிவை சந்தித்தாலும் கூட கடைசி நேரத்தில் சாம் கரன், இம்ரான் தாஹிர் இருவரும் சிறப்பாக விளையாடினர். ஒரு பக்கம் சாம் பொறுமையாக 47 பந்தில் 52 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணியை சரிவில் இருந்து மீட்டார். இன்னொரு பக்கம் கடைசி நேரத்தில் தாஹிர் 10 பந்தில் 13 ரன்கள் எடுத்தார். இப்படி இருவரும் சிஎஸ்கேவை மிக மோசமான ஸ்கோரிலிருந்து காப்பாற்ற, அதில் சாம் கரன் விக்கெட்டை எடுப்பதில் மும்பை மிகவும் கவனமாக இருந்தது.
அப்போது க்ருணால் வீசிய 17வது ஓவரில் கொஞ்சம் ரன் செல்ல, அந்த ஓவரின் கடைசி பந்தில் இம்ரான் பவுண்டரி அடித்தார். தேர்ட் மேன் திசையில் பந்தை அடித்துவிட்டு தாஹிர் ஓட, அங்கு இருந்த இஷான் கிஷான் நினைத்து இருந்தால் பந்தை தடுத்து இருக்க முடியும். ஆனால் அவர் சரியாக பீல்டிங் செய்யாமல் பந்தை பவுண்டரிக்கு விட, அதைப் பார்த்ததும் கோபம் அடைந்த குர்ணால் பாண்டியா, நீ என்ன செய்கிறாய், எப்படி பவுண்டரி விடலாம் எனக் கோபமாக கத்தினார். அதோடு இன்னும் கோபமாக கோலி பயன்படுத்தும் கெட்ட வார்த்தை ஒன்றையும் கூறி இஷான் கிஷானை அவர் திட்டினார்.
நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மிக மோசமாக விளையாடியபோதும், மும்பை வீரர் க்ருணால் பாண்டியா கோபமாக காணப்பட்டார். அதேபோல சேசிங்கின் போதும் மும்பையின் ஒப்பனர்கள் மிகவும் சீரியஸாக இருந்தனர். போட்டியை வேகமாக முடிக்க வேண்டும் என்பதாலும், அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பதாலுமே நேற்று ஒரு பவுண்டரி சென்றதற்கே க்ருணால் கோபம் அடைந்தார் எனக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து க்ருணால் கோபமாக கேட்ட வார்த்தையில் திட்டியதற்கு ட்விட்டரில் ரசிகர்களை அவரை பென் ஸ்டோக்ஸுடன் தொடர்புபடுத்தி கிண்டல் செய்து வருகின்றனர்.
— faceplatter49 (@faceplatter49) October 23, 2020
Krunal to Kishan:#IPL2020 #MIvCSK pic.twitter.com/G16h9DIWqT
— Rahul (@__r_a_h_u_l___) October 23, 2020
Krunal Pandya is behaving as if he is Jasprit Bumrah. Somebody please tell him he is not.#CSKvMI
— Sudhakar Singh (@Sudhakar_Singh_) October 23, 2020
tahir hits a four and krunal abuses the fielder on point, this is why i hate the mumbai indians, the most arrogant team of IPL.
— ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎︎ (@firkey_) October 23, 2020