“என்ன பீலிங்கா”.. ‘ஆர்சிபியை வச்சி செஞ்ச நெட்டிசன்கள்’.. கலகலப்பான மீம்ஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 24, 2019 03:27 PM

சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் டி20 போட்டி குறித்து மீம்ஸ்களை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

CSK vs RCB 2019 hilarious memes collection

ஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசனின் முதல் போட்டி நேற்று(23.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதன் தொடக்கப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற 17.1 ஓவரின் முடிவில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனைத் தொடர்ந்து 71 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவரின்  முடிவில் 71 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து இப்போட்டி குறித்து பலரும் மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

Tags : #CSKVRCB 🦁💛 #ANBUDEN #MEMES #TROLLS