“அந்த மனுசன் இந்த வேலைய பண்ணப்போ.. மனசு வலிச்சுது.. வேதனையா இருந்துது!” - உருகிய சிஎஸ்கே வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபராசக்தி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுபவர் சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர். கடந்த 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இம்ரான் தாஹிரை, இன்னும் 4 போட்டிகள் மட்டுமே சிஎஸ்கே அணிக்கு இருக்கும் நிலையில் இதுவரை களமிறக்கவில்லை.
இந்நிலையில் தன்னை களமிறக்குவது குறித்த எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று தாஹிர் வருத்தம் தெரிவித்துள்ளார் நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை 10ல் 3 ஆட்டங்களில் வெற்றியும், 7 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்து 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி அடுத்துவரும் 4 ஆட்டங்களையும் வென்றால், ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
இந்நிலையில் அஸ்வின் நடத்தும் 'ஹலோ துபை' நிகழ்ச்சியில் பங்கேற்ற இம்ரான் தாஹிர், “உலகம் முழுவதும் சென்று கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் சிஎஸ்கே அணியில் கிடைத்த மரியாதை போன்று எந்த அணி நிர்வாகமும் அளித்தது இல்லை. எங்கள் அணியின் முன்னாள் கேப்டன் டூப்பிளசிஸ் சிஎஸ்கேவில் இருந்தபோது, வீரர்களுக்காக 'கூல்டிரிங்ஸ்' சுமந்து சென்றது வேதனையாக இருந்தது. மனம் ரணமானது. இந்த ஆண்டு நான் செய்கிறேன். டூப்பிளசிஸ் எவ்வாறு நினைத்திருப்பார் என்று தோன்றியது. அதன்பின் அவரிடம் பேசினேன். சிஎஸ்கே அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால், 5-வதாக ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமான ஒன்றாகும்” என இம்ரான் தாஹிர் தெரிவித்தார்.