“ஒவ்வொரு மேட்சும் முடிவதற்குள் ஹார்ட் பீட் எகிறிடுது! குறிப்பா அந்த 2 சூப்பர் ஓவருக்கு அப்றம் தூக்கம் வர்ல பாஸ்!” - முக்கிய ‘ஐபிஎல்’ அணியின் கேப்டன் பேச்சு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதுபாயில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 164 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து 165 எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, நம்பிக்கை வீரர்கள் ராகுல் (15), அகர்வால் (5), கெயில் (29) ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும் பூன் (53), மேக்ஸ்வெல் (32) உள்ளிட்டோரால் வென்றது. இதுகுறித்து பேசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், பஞ்சாப் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியின்போது ஒவ்வொரு முறையும் தனக்கு ஹார்ட் பீட் எகிறி உச்சகட்டத்தில் துடிக்கிறது என்றும் அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள், அடுத்துவரும் போட்டிகளில் ஃபினிஷர்களாக இருக்க வேண்டு ம் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக19 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 6 பேட்ஸ்மேன்களுடன், ஆல் ரவுடண்டருடன் விளையாடியதற்குப் பலன் கிடைத்துள்ளதாகவும், மேக்ஸ்வெல் நடுப்பகுதியில் சிறப்பாகவே பேட் செய்ததாகவும், குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு சூப்பர் ஓவர்களுக்குப் பின் கிடைத்த வெற்றிக்குப் பின் தனக்குத் தூக்கமே வரவில்லை என்றும், தூக்கம் வருவதற்கு நீண்ட நேரம் ஆனதாகவும், சூப்பர் ஓவருக்கு முன்பாகவே போட்டியை எவ்வாறு முடித்திருக்க வேண்டும் என்கிற நினைப்பு ஓடிக்கொண்டே இருந்தாகவும் தெரிவித்துள்ளார்.
ஷமிக்கு போன்ற மூத்த பந்துவீச்சாளர் கூடுதல் பொறுப்புடன் செயல்படும்போது, அதைப் பின்பற்றி இளம் வீரர்களும் உற்சாகமாகச் செயல்படுவதாகவும், அடுத்தடுத்த போட்டிகளிலும் ஷமியின் இதேபோன்ற சிறப்பான பந்துவீச்சும், விக்கெட் வீழ்த்தும் திறமையும் பெரிதாக இருக்க வேண்டும் என விரும்புவதாகவும், அவருடைய பந்துவீச்சு துல்லியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
