'அவரு பாட்டுக்குதான இருந்தாரு, ஏன் இப்படி?!!'... 'CSK வீரரை திடீர் ட்ரெண்டாக்கி'... 'வெச்சு செஞ்ச ரசிகர்கள்'... 'அதுக்கு சொன்ன காரணம்தான்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Nov 02, 2020 08:06 PM

சிஎஸ்கே வீரர் முரளி விஜயை திடீரென ரசிகர்கள் ட்விட்டரில் இந்தியா லெவலில் ட்ரெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

IPL2020 CSKs Murali Vijay Trends On Twitter Fans Troll Him Brutally

ஆரம்பத்தில் இருந்தே  சென்னை அணிக்காக விளையாடி வரும் முரளி விஜய்இடையே, டெல்லி அணிக்காக 2014ஆம் ஆண்டும், பஞ்சாப் அணிக்காக 2015-17 ஆண்டுகளிலும் விளையாடினார். பின்னர் மீண்டும் 2018ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால்  முரளி விஜய் தொடர்ந்து அணியில் சொதப்பி வருவதால், துவக்க ஆட்டக்காரர்கள் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் மட்டுமே அவருக்கு சென்னை அணியில் இடம் கிடைத்து வருகிறது.

IPL2020 CSKs Murali Vijay Trends On Twitter Fans Troll Him Brutally

இருப்பினும் முன்னதாக முரளி விஜய் சென்னை அணிக்காக 127, 113 என இரண்டு முறை சதமடித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படி தொடக்கத்தில் அசத்திய அவர் கடைசி சில ஆண்டுகளாகவே விளையாடாமலும், வாய்ப்பு கிடைக்காமலும் உள்ளார். இந்த ஆண்டும் கெய்க்வாட்டுக்கு ஏற்பட்ட கொரோனா, ராயுடு காயம் போன்ற காரணங்களாலேயே ஒரு சில போட்டிகளால் விளையாட முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திகொள்ளாமல் அவர் சொதப்பியே வந்துள்ளார். இந்நிலையில்தான் இன்று ட்விட்டரில் முரளி விஜயின் பெயரை ட்ரெண்ட் செய்து அவரை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

IPL2020 CSKs Murali Vijay Trends On Twitter Fans Troll Him Brutally

அதிலும் பலருக்கு முரளி விஜய் ஏன் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் எனத் தெரியாததால் அதைக் கேட்டு ட்வீட் செய்ததாலேயே அவர் இந்திய அளவிற்கு டிரெண்ட் ஆகியுள்ளார். இதையடுத்தே உண்மையில் அவர் எப்படி ட்ரெண்டாகத் தொடங்கினார் எனத் தெரியவந்துள்ளது. இந்த ஐபிஎல் தான் கடைசி சீசன் என்ற நிலையிலிருக்கும் வீரர்கள் பட்டியல் ஒன்று ட்விட்டரில் பகிரப்பட, அதில் பல பெயர்கள் இடம்பெற்றிருந்தும் பலரும் ஒரே மாதிரியாக முரளி விஜயை அந்த பட்டியலில் சேர்த்துள்ளனர். இதனாலேயே முரளி விஜய் பெயரை ட்ரெண்டாகி அவர் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

Murli Vijay is trending bcoz everyone is asking why he is Trending 😄😄
— AsHokan (@ImAsHokan) November 2, 2020

Why Murli Vijay is trending now? #MuraliVijay#Master pic.twitter.com/aQFyjofEOf
— கடைசி வரைக்கும் sĮᑎ𝔤𝐋Ⓔ தா😜 (@Single00777) November 2, 2020

Players who have played their last IPL:
Kedar jadhav
Dinesh Karthik
Murli Vijay
Robin Uthappa
Varun Airon
Mohit sharma
Dale Stan
Dj Brovo
Watson
Hazalwood

Additions and omissions are welcomed.
— Berozgaar alp2018 (@Bhagchandkumaw2) November 2, 2020

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2020 CSKs Murali Vijay Trends On Twitter Fans Troll Him Brutally | Sports News.