"இதுவரை எந்த 'சிஎஸ்கே' வீரரும் செய்யாத 'சாதனை'..." அசத்திக் காட்டிய 'இளம்' வீரர்,.. "நீங்க வேற 'லெவல்' போங்க"!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், லீக் சுற்றில் தங்களது இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை இன்று வீழ்த்தியிருந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி, சென்னை அணிக்கு எதிரான தோல்வியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.
இந்த போட்டியில் சென்னை அணியின் இளம் வீரர் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். கடைசி 3 போட்டிகளில் சென்னை அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நிலையில் மூன்று போட்டிகளிலும் கெயிக்வாட் அரை சதமடித்து ஆட்ட நாயகன் விருதினை அனைத்து போட்டிகளிலும் தட்டிச் சென்றார்.
அது மட்டுமில்லாமல், மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதமடித்த முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் என்ற பெருமையும் கெயிக்வாட் பெற்றார். முன்னதாக, இந்த சீசனின் தொடக்கத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கெயிக்வாட் அணியில் இடம்பெறவில்லை. அதன்பிறகு, தான் களமிறங்கிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடைசி 3 போட்டிகளிலும் அரை சதமடித்து கெயிக்வாட் அடுத்த சீசனில் தன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது குறிப்பிடத்தக்களது.

மற்ற செய்திகள்
