ஃபேஸ்புக்கில் பழகிய இளைஞரை காதலித்து கரம் பிடித்த இளைஞர்.! வைரலாகும் திருமண சடங்குகள் ஃபோட்டோஸ்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Shiva Shankar | Jul 06, 2022 10:31 PM

கொல்கத்தாவைச் சேர்ந்த அபிஷேக் ரே என்பவருக்கு சைதன்யா சர்மா என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் கிடைத்த அறிமுகத்தை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

Kolkata men Couple marriage viral ritual pics LGBTQ

முன்னதாக இருவரும் நண்பர்களாக பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே இவர்கள் இருவருக்கும் இடையே காதல் வளர்ந்திருக்கிறது. எந்த அளவுக்கு அது தீவிரமாக போனது என்றால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதன் பின்னர் மனம் புரிந்து இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து இரு வீட்டாரிடமும் பேசி எளிமையான முறையில் கோவாவில் திருமண நிச்சயதார்த்தத்தை அண்மையில் இவர்கள் செய்து கொண்டனர். இதேபோல் தங்கள் திருமணத்தையும் மிகவும் எளிமையான முறையில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் சூழ செய்து கொள்வதற்கு திட்டமிட்டனர்.

ஆனால் கொஞ்ச நாட்களில் இவர்களுக்கு வேறு ஒரு யோசனை தோன்றியது, அதன்படி விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் வழக்கமான ஆண் - பெண் திருமணத்தை போலவே மிகவும் பிரம்மாண்டமாக, சடங்கு சம்பிரதாயங்களுடன், சகலமுமாக இந்த திருமணத்தை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் கொல்கத்தாவில் அக்னி முன்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு, திருமண ஒப்பந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

இதேபோல் இந்து முறைப்படி பெங்காலி மற்றும் மார்வாரி முறையிலும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இவர்களுடைய திருமணத்தில் திரளாக கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இவர்களின் திருமணத்தில் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Tags : #LGBTQ #KOLKATA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kolkata men Couple marriage viral ritual pics LGBTQ | India News.