ஊர் திரும்பிய 'தொழிலாளர்களுக்கு' ஓடி,ஓடி உதவிய அதிகாரி...அவருக்கா இப்டி ஒரு 'நெலமை' வரணும்?... அதிர்ந்து போன மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அயராது ஓடி, ஓடி உதவிய அதிகாரிக்கு நேர்ந்த முடிவு அனைவரையும் அதிர வைத்துள்ளது.

மேற்கு வங்காளம் மாநிலம் ஹோக்லி மாவட்டம் சந்தன்நகர் பகுதியில் துணை மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தவர் டிப்டாடா ராய்(38). திருமணமாகி 4 வயதில் மகன் இருக்கிறான். சிவில் சர்வீஸ் அதிகாரியான இவர் கொரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றி வந்தார். அதோடு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளையும் ஓடி,ஓடி செய்தார்.
இவரது இந்த சேவை பலராலும் பாராட்டப்பட்டது. மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் டிப்டா ராய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனாலும் நேற்று முன்தினம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. டிப்டா ராய்க்கு முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்
