ராட்டினத்துல போறப்போ செல்பி எடுக்க முயற்சித்த இளம்பெண்?..திடீர்னு கேட்ட அலறல் சத்தம்.. அதிர்ச்சியில் உறைந்துபோன மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொல்கத்தாவில் ராட்டினத்தில் சவாரி செய்த இளம்பெண் ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | "சுத்த முட்டாள்தனம்'ங்க இது.." முக்கியமான மேட்சில் பும்ரா செய்த தவறு..? விளாசித் தள்ளிய பீட்டர்சன்
ராட்டினம்
கொல்கத்தாவின் எண்டால்லி பகுதியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ராட்டினம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணித்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தால் தற்போது ராட்டினத்தை இயக்க தடை விதித்துள்ளது காவல்துறை. ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியை சேர்ந்த பிரியங்கா ஷா என்னும் 28 வயது இளம்பெண் ராட்டினத்தில் பயணிக்க சென்றிருக்கிறார். சவாரியின் போது, துரதிருஷ்டவசமாக பிரியங்கா ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்திருக்கிறார்.
சிகிச்சை
இதனை அடுத்து, கீழே விழுந்த பிரியங்காவை அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்கள். இந்நிலையில், பிரியங்காவிற்கு தலையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளித்துவருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எண்டால்லி பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
வழக்கு பதிவு
இது குறித்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் சித்தரஞ்சன் சாஹா (55), முகமது உஸ்மான் மற்றும் ராட்டினத்தின் ஆபரேட்டர் பைத்யநாத் பஹ்கார் (20) ஆகிய மூன்று பேரையும் கைது செய்திருக்கின்றனர். இதுகுறித்து, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி,"இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. பயணிகள் சிலர், பிரியங்கா செல்பி எடுக்க முயற்சித்த போது, தவறி விழுந்ததாக கூறியுள்ளனர். சிலர், அவர் இருக்கையில் சரியாக அமரவில்லை என்றும் வேறு இருக்கையில் மாறி உட்காரும்போது அவர் தவறி விழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
அஜாக்கிரதையுடன் ராட்டினத்தை இயக்கிய குற்றத்துக்காக 3 பேரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.