நீட் தேர்வு எழுத.. '24' மணி நேரத்துல 700 கி.மீ 'TRAVEL' செய்து வந்த 'இளைஞர்'... 'தேர்வு' மையம் வந்து சேர்ந்த இளைஞருக்கு,,.. இறுதியில் காத்திருந்த 'சோகம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநீட் தேர்வில் கலந்து கொள்ள வேண்டி, பீகாரில் இருந்து சந்தோஷ் குமார் யாதவ் இளைஞர் சுமார் 700 கிலோமீட்டர் பயணம் செய்து கொல்கத்தாவிலுள்ள தேர்வு மையத்திற்கு வந்துள்ளார்.

பல மாதங்களாக அந்த இளைஞர் தேர்வுக்காக தயார் செய்து வந்த நிலையில், 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை நீட் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அவர் எத்தனை முறை சொல்லியும் அவரை அங்கிருந்த அதிகாரிகள் தேர்வு எழுத அனுப்பவில்லை.
இதன் காரணமாக, சந்தோஷ் குமார் யாதவ் என்ற அந்த இளைஞர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கூறுகையில், 'நான் எத்தனையோ தடவை அதிகாரிகளிடம் கெஞ்சியும் அவர்கள் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. 2 மணிக்கு ஆரம்பிக்கும் தேர்வுக்கு நான் 1:40 மணியளவில் தேர்வு மையம் வந்தடைந்தேன். ஆனால், தேர்வு எழுத வருபவர்கள், 1:30 க்குள் தேர்வு மையத்திற்குள் நுழைய வேண்டும் என்பதால் என்னை உள்ளே விடவில்லை' என வருத்தத்துடன் கூறினார்.
சுமார் 24 மணி நேரத்தில், இரண்டு பேருந்துகள் ஏறி, அவர் பயணம் செய்து தேர்வு எழுத வந்த போதும் அவரால் தேர்வு எழுத முடியவில்லை. பாட்னா வரும் வழியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் காரணமாக, 6 மணி நேரம் தாமதம் ஆனதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, அவர் தனது ஒரு வருடத்தை தொலைத்து விட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
