'ஒற்றை புகைப்படம் சொன்ன பதில்!'.. ஐபிஎல் தொடரில் இருந்து 'மாயந்தி லாங்கர்' நீக்கப்பட்ட பின்னணி! நடந்தது இதுதான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Sep 22, 2020 09:50 AM

2020 ஐபிஎல் சீசன் 13வது தொடரில் பிரபல தொகுப்பாளர் Mayanti Langer கலந்துள்ள மாட்டார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

sports anchor Mayanti Langer will not to be part of IPL 2020

ஐபிஎல்லில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட தொகுப்பாளர் Mayanti Langerக்கு இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் நெருங்கிய நண்பரான இவர் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்டு பின்னி உடன் நட்பாக பழகி வந்தார். அந்த நட்பு ஒரு கட்டத்தில் நெருக்கமாகி அது பின்னர் காதலாகி திருமணத்தில் முடிந்தது.\

sports anchor Mayanti Langer will not to be part of IPL 2020

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் Mayanti Langer தொகுத்து வழங்க மாட்டார் என்று ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதற்கான காரணத்தை தற்போது அவரே வெளிப்படுத்தியுள்ளார். காரணம் மயந்தி லாங்கர் - பின்னி ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளதுதான். குழந்தையை வைத்துக்கொண்டு கொரோனா சூழலில், பயணம் செய்து மேட்ச் நிகழ்வுகளை தொகுத்து வழங்க முடியாது என்பதால் ஐபிஎல் நிர்வாகம் இத்தகைய உத்தரவினை பிறப்பித்தது.

sports anchor Mayanti Langer will not to be part of IPL 2020

இதுபற்றி பேசிய  Mayanti Langer ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், மே மாதம் போட்டி நடந்திருந்தால் நிச்சயமாக கலந்திருப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் கர்ப்பமாக இருந்தபோது முக்கியமான சில உதவிகளை ஐபிஎல் நிர்வாகம் செய்ததாகவும் அதற்கு மிகவும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறிய அவர் விரைவில் மீண்டும் தொகுப்பாளினியாக திரும்பி வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.  அத்துடன் குழந்தையுடன் தான்  இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டுமுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sports anchor Mayanti Langer will not to be part of IPL 2020 | Sports News.