கடைசில இவங்களும் இப்படி பண்ணிட்டாங்களே ... 'அதிர்ச்சி' அளித்த முன்னணி நிறுவனம் 'கலக்கத்தில்' ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பெரும்பான்மை மக்கள் வேலையிழப்பு நடவடிக்கைகளை சந்தித்து வருகின்றனர். சிறிய நிறுவனம் தொடங்கி பெரு நிறுவனங்கள் வரை பெரும்பான்மை நிறுவனங்கள் வேலையிழப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளன.

அந்த வகையில் முன்னணி நிறுவனமான டெல் வரும் வாரத்தில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக தலைமை நிறுவனர் ஜெஃப் கிளார்க் திங்களன்று அனைத்து கூட்டத்தையும் கூட்டவுள்ளாராம். இதுகுறித்து டெல் நிறுவனமும் பணிநீக்கம் அல்லது மறுசீரமைப்பு இருக்கும் என ஒப்புக்கொண்டு இருக்கிறது.
டெல் நிறுவனத்தின் இந்திய செய்தித்தொடர்பாளர் ஒருவர் இதுபற்றி கூறுகையில், ''வருங்காலத்தை கருத்தில் கொண்டு எதிர்கால வாய்ப்புகளுக்காக போட்டியிடும் போது இவற்றை தவிர்க்க முடியாது. இந்த வகை நிறுவன மதிப்பாய்வை நாங்கள் தவறாமல் செய்யும்போது, அது எப்போதுமே சில வேலை இழப்பு அல்லது மறுசீரமைப்புக்கே வழிவகுக்கும்,'' என்றார்.
கொரோனாவால் 2-வது காலாண்டில் டெல் நிறுவனத்தின் விற்பனை 3% குறைந்துள்ளது. ஜனவரி மாத நிலவரப்படி உலகம் முழுவதும் இந்நிறுவனத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
