'நான் உங்ககிட்ட வைரம் வாங்கலாம்னு வந்துருக்கேன், வைரத்தை பார்க்கலாமா...?' 'கண் இமைக்கும் நேரத்தில்...' பக்காவா ப்ளான் பண்ணி நடந்த நூதன கொள்ளை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 16, 2020 10:45 AM

வைர வியாபாரம் செய்வது போல் ஏமாற்றி ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர கற்களை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.

People who pretended to be merchants and stole diamonds

இலங்கையைச் பூர்விகமாக கொண்டவர் முகமது முஷ்மில் (42),  இவர் வைர வியாபார தொழில் செய்து வந்தார். இவர் இலங்கையில் இருந்து  கடந்த மாதம் 26-ம் தேதி வைர வியாபாரம் செய்ய  சென்னை மண்ணடி வந்து, மூர் தெருவில் உள்ள ஒரு மேன்சனில் தங்கி உள்ளார். அப்போது 4 பேர் முகமதுவிடம்  வைர கற்களை வாங்குவது தொடர்பாக வந்து சந்தித்துள்ளனர். அங்கு, முகமதுவிடம் விலை உயர்ந்த வைர கற்கள் இருந்துள்ளதை பார்த்துள்ளனர். வைர கற்களை வாங்கி பார்ப்பது போல் பார்த்துவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் நூதன முறையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர கற்களை திருடி சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பிறகு முகமது தன்னிடம் இருந்த வைர கற்களை பார்த்தபோது மாயமானது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த முகமது முஷ்கில் வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மேன்சனில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது முகமதுவிடம் வைர கற்களை திருடி சென்றது சென்னை ஏழுகிணறு மொட்டை மேஸ்திரி தெருவைச் சேர்ந்த சுபேர் முகமது (33) என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர், அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான வைரக்கற்கள், 50 ஆயிரத்தை  பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை  சிறையில் அடைத்தனர்.

மேலும்,ரூ.7 லட்சம் மதிப்பிலான வைர கற்களுடன் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் 3 பேரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : #DIAMOND